தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பாலக்கோடு வடக்கு ஒன்றியத்தின் சார்பில் பாஜக பாலக்கோடு மேற்கு ஒன்றிய தலைவர் சேட்டு தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர், தற்போதைய பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே. பி. அன்பழகன் தலைமையில், முன்னாள் தமிழக முதலமைச்சரும் அதிமுக கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று மாலை சேலத்தில் அதிமுக கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தர்மபுரி அதிமுக மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.