தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது அதிமுக அம்மா பேரவை சார்பில் திண்ணைப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இந்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளும்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அதிமுக அரசு கொண்டுவந்த பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து வரும் சூழலில் பொதுமக்களும் பல்வேறு மாற்றுக் கட்சியினரும் தற்போது அதிமுகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நேற்று மாலை பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சரும் தற்போதைய பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே பி அன்பழகன் தலைமையில் திண்டல், பிச்சானூர், குட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் தங்களது கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர் புதிய உறுப்பினர்களுக்கு அதிமுக கட்சி துண்டுகள் அணிவித்து முன்னாள் அமைச்சர் வரவேற்றார் இந்த நிகழ்வில் தர்மபுரி மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.