தர்மபுரி: தென்மேற்கு பருவமழை குறித்து ஆலோசனை கூட்டம்

56பார்த்தது
தர்மபுரி: தென்மேற்கு பருவமழை குறித்து ஆலோசனை கூட்டம்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியதலைவர் சதீஸ் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியதலைவர் தெரிவித்ததாவது, தாழ்வான பகுதிகளின் விவரப்பட்டியல், அவசரகால போக்குவரத்து வழித்தடங்கள், போக்குவரத்து ஊர்திகளின் விவரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுப்பணித்துறை/ ஊரக வளர்ச்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகள் பற்றிய விவரப் பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள நிவாரண முகாம்களான சமுதாயக்கூடங்கள்/திருமணமண்டபங்கள், பள்ளிகள் பற்றிய விவரப்பட்டியல் தயார் நிலையில் வைத்திருப்பதோடு, மேற்கண்ட இடங்களை ஆய்வு செய்ய வேண்டும். 

மழை வெள்ளக் காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய தேவையான வாகனங்கள், தண்ணீர் டேங்க்குகள், போர்டபிள் ஜெனரேட்டர்கள், டார்ச் லைட்கள், உணவு சமைக்க பாத்திரங்கள், கேஸ் அடுப்புகள், நியாய விலைக் கடைகளில் தேவையான உணவு பொருட்களின் இருப்பு ஆகியன தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைக் காலத்திற்கு முன்பாக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியதலைவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி