மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பக்தி பரவசத்தில் பக்தர்கள்

63பார்த்தது
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட மதிகோன்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மகா சக்தி முத்து மாரியம்மன் திருக்கோவில். மாவட்ட அளவில் பிரசத்தி பெற்ற இந்த கோவிலில் நேற்று அதிகாலை விநாயகர் வழிபாடு மற்றும் கங்கணம் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

மேலும் ஒகேனக்கல்லில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் தர்மபுரி மாவட்ட செயலாளர் புரட்சி தலைவி அம்மா பேரவை முன்னாள் நகர மன்றத் தலைவர், மு. தலைவர் தருமபுரி & கிருஷ்ணகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தருமபுரி நகர கழக செயலாளர் திரு. SR. வெற்றிவேல் அவர்கள் தலைமையில் சேலம் அங்காளம்மன் கலை குழுவினர் சார்பில் பக்தி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து வரும் வியாழக்கிழமை வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என விழா குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி