நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு

64பார்த்தது
தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குன குணசேகரன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம், மாநில அளவில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு விருது வழங்கும் திட்டமானது அறிவிக்கப்பட்டு, அதற் கான வழிகாட்டு நெறி முறைகளும், தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அங்கக வேளாண்மையில், நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதனை ஊக்குவித்து, பிற அங்கக விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விவசாயிகளுக்கும், நம்மாழ்வார் பெயரில் விருது 5 லட்சம் பணப் பரிசு, பாராட்டு பத்திரத்துடன் வழங்கப்பட உள்ளது.
எனவே, தகுதியான மற்றும் விருப்பமுள்ள விவசாயிகள், தங்கள் அருகாமையில் உள்ள உதவி வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தை அணுகி, உரிய விபரம் பெற்று, உழவன் செயலி மூலமாக விண்ணப்பித்து பயன்
பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி