தர்மபுரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய வேளாண் அமைச்சர்

58பார்த்தது
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம்
தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி, அவர்கள் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 1454 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் ஊரகபகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் கோரிக்கை மனுக்கள் வழங்கிய 100 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 18 இலட்சம் மதிப்பிலான அரசு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் 508 முழுநேர நியாய விலைக் கடைகள் மற்றும் 587 பகுதிநேர நியாய விலைக் கடைகள் என மொத்தம் 1095 நியாய விலைக்  கடைகளும், 118 நடமாடும் நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றது.  

தருமபுரி மாவட்டத்தில் 01. 06. 2023 முதல் 30. 06. 2024 வரை புதிய மின்னனு குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பம் செய்த 5166  மனுதாரர்களில் முதற்கட்டமாக விசாரணை மேற்கொண்டு தகுதியுள்ள 1454  புதிய  மின்னணு குடும்ப அட்டைகள் இன்றையே தினம் வழங்கப்பட்டது. மேலும், இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் மூலம் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் கோரிக்கை மனுக்கள் வழங்கிய 100 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 18 இலட்சம் மதிப்பிலான அரசு நலதிட்ட உதவிகளை இன்று வழங்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி