ஆதிதிராவிடர் மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு.

988பார்த்தது
ஆதிதிராவிடர் மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் சிக்கதோரணம் பெட்டம் ஊராட்சி சின்ன கும்மனூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வீட்டுமனை பட்டா கேட்டு கிராம தலைவர் கிருஷ்ணன், மல்லப்பன், எல்லப்பன் ஆகியோர் தலைமையில் தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மனுவில் நாங்கள் பாலக்கோடு வட்டம் சிக்கதோரணம் பெட்டம் ஊராட்சி சின்ன கும்மனூர் கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றோம், சிக்கதோரணம் பெட்டம் ஊராட்சியில் சர்வே நம்பர் 425, 427, 428, 596, 600 - ல் சுமார் 48 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது, இது கால்நடை மேய்ச்சல் புறம்போக்கு நிலம் ஆகும்.
இங்கு 55 ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு இல்லாமல் உள்ளோம் எனவே வீடு இல்லாத எங்களுக்கு மேற்கண்ட இடத்தில் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி