பாப்பாரப்பட்டி அருகே உள்ள திப்பட்டிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணாமணி விவசாயி. இவர் வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து பாப்பாரப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவுத்ரி வெங்கடேஷ் தலைமையில் போலீசார், திப்பட்டிப்பள்ளம் கிராமத்திற்கு சென்று கண்ணாமணி வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது அவர் வீட்டில் சாராயம் காய்ச்சி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வீட்டில் வைத்திருந்த 5 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.