தருமபுரி மாவட்டத்தில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மதுபா னங்களை பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க மாவட்ட எஸ். பி. உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, அரூர், பென்னாகரம், உள்ளிட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதி களில் போலீசார் சோதனை செய்ததில் 13 பேர் அரசு மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.