அரூர் - Harur

அரூர்: நடப்பாண்டு தீபாவளியில் ரூ. 3.20 கோடிக்கு மது விற்பனை

தர்மபுரி நகரில் 14 டாஸ்மாக் மதுக்கடைகளும், கிராமப்புறங்களில் 52 டாஸ்மாக் கடைகளும் என மொத்தம் 66 மதுக்கடைகள் உள்ளன. இதில் ஒருசில கடைகளில் பார்கள் இணைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில், தினசரி சராசரியாக 2. 30 கோடிக்கு மது விற்பனையாகிறது. தீபாவளி பண்டிகையொட்டி கடந்த 5 நாட்களாக தினசரி 2. 80 கோடி சரக்கு விற்பனை ஆகியுள்ளன. கடந்த 31ம்தேதி தீபாவளி அன்று 3. 20கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு மதுவிற்பனை சரிந்துள்ளது. கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு 4. 12 கோடிக்கு மதுவிற்பனை நடந்தது. கடந்த ஆண்டு 3. 50 கோடிக்கு மதுவிற்பனை ஆகியுள்ளது. நடப் பாண்டு நேற்று முன்தினம் 3. 20 கோடிக்கு தான் மது விற்பனை நடந்துள்ளது கடந்த ஆண்டை விட நடப்பாண்டு 20 லட்சத்திற்கு மது விற்பனை சரிந்துள்ளது. டாஸ்மார்க் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

வீடியோஸ்


தர்மபுரி