அரூர் - Harur

அரூர்: சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு

அரூர்: சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த சிறுமியும், 17 வயது சிறுவனும் காதலித்து வந்தனர். இதை சிறுமியின் பெற்றோர் கண்டித்தனர். இதனால் சிறுமியும், சிறுவனும் கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை விட்டு வெளியேறி கோவையில் திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வாடகை வீட்டில் வசித்துள்ளனர். இதில் கர்ப்பம் அடைந்த சிறுமி பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அவருடைய தாயார் அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறுமியை அழைத்து சென்றார். அங்கு இருந்தவர்கள் சிறுமியை தர்மபுரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு விசாரணை நடத்திய மருத்துவர்கள் இது பற்றி அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து காவலர்கள் இன்று (நவ.,23) சிறுவன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடியோஸ்


தர்மபுரி