அரூர் - Harur

தர்மபுரி: ரயில்வே பாலத்தில் தேங்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி

தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மொரப்பூர் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், ஊத்தங்கரை, அரூர், சிந்தல்பாடி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவ்வழியாக செல்கின்றனர். மொரப்பூர் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் தாழ்வாக உள்ளதால் சிறு குளம் போல் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனை சீரமைக்க தொடர்ந்து பொது மக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


தர்மபுரி