அரூர் - Harur

அரூர்: புகையிலை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல்

அரூர்: புகையிலை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல்

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி, கோபிநாதம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட தென்கரைக்கோட்டையில், இன்று நவம்பர் 21, ஒரு பெட்டிக்கடை மற்றும் வடகரையில் ஒரு பெட்டிகடை என 2 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு, அபராதமாக தலா 25,000 மற்றும் 15 நாட்கள் கடை இயங்க தடை விதித்து மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா உத்தரவிட்டார். உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையிலான குழுவினர், இராமியம்பட்டியில் ஒரு மீன் இறைச்சி விற்பனை கடையில் பிரிட்ஜில் இருப்பு வைத்திருந்த கெட்டுப்போன மீன் இறைச்சி, உரிய விபரங்கள் இல்லாத மாவு பாக்கெட் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. அருகில் ஒரு உணவகத்தில் பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் வழங்கப்படுவது கண்டறிந்து, பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. 2 கடைகளுக்கும் அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

வீடியோஸ்


தர்மபுரி