ஓசூர் அருகே உள்ள அத்திப்பள்ளியில் நேற்று நடந்த பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள டி. அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஏழு பேரின் உடலானது, இன்று சொந்த கிராமத்திற்கு வந்தன. அப்போது
கிராம மக்கள் திடீரென வாகனத்தின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் , அந்தந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியலால் கிராம மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.