காவேரி விவகாரத்தில் விவசாயிகளின் கருத்துகளை கேட்கவேண்டும்

879பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூரில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் குறுவைப் பயிர்கள் தற்போது காய்ந்து உள்ளது. அதற்கு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு 13, 500 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்து உள்ளார்,
தினந்தோறும் நீர் பங்கீடு என்ற இலக்கை நோக்கி , இந்த வழக்கை தமிழ்நாடு அரசு, 28 ஆண்டுகளாக சட்டபோரட்டத்தில் கொண்டு சென்று, இருந்து அதற்கான ஒரு தீர்ப்பை பெற்று இருந்தால், இன்று இருமாநில உறவு மேம்பட்டு இருக்கும், மோதலுக்கு ஒரு முற்று புள்ளி வைக்கபட்டு இருக்கும்,
இருக்கின்ற உண்மையை உச்ச நீதிமன்றம் உணர்ந்து 2033 வரை காத்திருக்காமல் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்,
மேலும் தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி,
அதில் அனைத்து விவசாய சங்க தலைவர்களை அழைத்து அவர்களின் கருத்துகளை கேட்டு காவேரி விவகாரத்தில் நல்ல முடிவை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி