மின்கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி மக்களையும் சிறு தொழில்களையும் அழிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவோம்.! புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பாக, தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கத்தின் தருமபுரி பேருந்து நிலையம் அருகே காமராஜர் சிலை அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் சிவா புரட்சிகர மக்கள் அதிகாரம், மாவட்ட செயலாளர், தலைமை தாங்கினார்.
கண்டன உரை:
தோழர் வில்கிருஷ்ணன் மாவட்ட செயலாளர், CPI, (ML) தோழர் கோவிந்தராஜ் மாவட்ட செயலாளர், CPI (ML) லிபரேஷன், தோழர் கண்ணகி, சுதந்திர வளர்ச்சிக்கான விவசாயிகள் சங்கம். தோழர் முத்துகுமார் மாநில செயலாளர்,
புரட்சிகர மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு, ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக தோழர் ராமலிங்கம், மாவட்ட குழு உறுப்பினர், புரட்சிகர மக்கள் அதிகாரம், அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.