தென்பெண்ணையாற்றில் 1. 50 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு

83பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கம்பைநல்லூர் அருகே யுள்ள ஈச்சம்பாடி தென்பெண்ணை ஆற்றில், பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டம் 2024-25ன் கீழ், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பாக இன்று செப்டம்பர் 25 காலை, 1. 50 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், அரூர் எம் எல்ஏ சம்பத்குமார், தர்மபுரி மண்டல மீன்வள துணை இயக்குநர் சுப்பிரமணியன். தர்மபுரி மீன்வள உதவி இயக்குநர் கோகுலரமணன், தனபால், ஈச்சம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், கம்பைநல்லூர் காவல் ஆய்வாளர், பொதுப்ப ணித்துறை அலுவலர்கள் மாரியப்பபன் மற்றும் கிராம
மக்கள் கலந்து கொண்டனர். இத்திட்டமானது, தற்போது 3வது வருடமாக நடப்பாண்டும் செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆற்று நீர் ஆதாரங்களில் மீன்வளத்தை அதிகரித்து, ஆறுகளில் மீன் பிடிப்பு செய்யும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்த வழி வகை செய்யப்படுவதோடு, அனைத்து தரப்பு மக்களுக் கும் மீன் உணவு கிடைப்ப தையும் உறுதி செய்கிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி