ஓசூர் அத்திப்பள்ளியில் நேற்று பட்டாசு குடோனுக்கு தேவையான பட்டாசுகள் லாரி மூலம் வந்துள்ளது. இதனை இறக்கும் பணியில் குடோனில்
வேலை செய்த 20-ம் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ முழுவதுமாக பரவி குடோனில் இருந்த பட்டாசுகள் முழுவதும் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த டி. அம்மாபேட்டையை சேர்ந்த 7 இளைஞர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் சடலம் உறவினர்களிடம் பிரேத பரிசோதனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக ஊருக்கு கொண்டு வரப்பட்டன.
அப்பொழுது ஆம்புலன்ஸை கண்ட உறவினர்கள் கதறி அழுது ஆம்புலன்ஸ்களை சுற்றி வளைத்துக் கொண்டு , ஆம்புலன்ஸ் மீது பூக்களை வாரி வாரி தூவினர்.
ஆம்புலன்ஸை தென்பெண்ணை ஆற்று வழியே மயானத்திற்கு அருகே கொண்டு சென்று ஏழு பேரின் உடல்களையும் இறக்கி வைத்து சடங்குகள் செய்து. அடக்கம் செய்ய முயன்ற போது சடலங்களை கண்டு அவரது உறவினர்கள் கதறியக் காட்சிகள் காண்போரை கண் கலங்க செய்தது. ஏழு பேரின் சடலங்களும் கிராம மக்களின் கண்ணீர் அஞ்சலியியுடன் மயானத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டது. ஒரே கிராமத்தைச் சார்ந்த 7 இளைஞர்கள் உயிரிழந்ததால் டி. அம்மாபேட்டை கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.