அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காவல் துறை சார்பில் போதைப்பொருட்கள் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஷ் கலந்து கொண்டு பேசுகையில், 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்பு ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் இருசக்கர வாக னங்கள் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டக்கூடாது. மாண வர்கள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக தெரிந்து கொண்டு பின்பற்ற வேண்டும். போதைப்பொருட் கள் பழக்கத்தை முழுமையாக தவிர்க்க வேண்டும். மாணவி கள், பெண்களை கேலி, கிண்டல் செய்யும் செயல்பாடுகளை
முழுமையாக தவிர்க்க வேண்டும் என்றார். இதேபோல் போக்சோ சட்டம் குறித்தும், அந்த சட்டத்தின் மூலம் எடுக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கி கூறினர். தொடர்ந்து மாணவர்கள் சாலை பாது காப்பு, போதைப்பொருள் தடுப்பு குறித்து உறுதிமொழி ஏற் றுக்கொண்டனர். முகாமில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், ஆசிரியர்கள் பாவாஷா, பழனிதுரை, சக்திவேல் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்ப டுத்தினர். இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.