புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு அபராதம்

68பார்த்தது
மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோ பால், கம்பைநல்லூர் போலீசார் கே. அக்ரஹாரம், சேக் காண்டஅள்ளி ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அப் போது அந்த பகுதிகளில் மளிகை, டீக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து 2 கடை களும் செயல்பட தடை விதித்து கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர். மேலும் மறு உத்தரவு வரும் வரை கடைகளை திறக்க கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி