கோவிலில் திருட முயன்றவர் கைது

477பார்த்தது
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே ஆர். கோபிநாதம்பட்டியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஆகம விதிகளின்படி பூஜை கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை கோவிலில் இருந்து சத்தம் வரவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கோவிலுக்கு சென்றனர். அப்போது 2 பேர் கோவிலின் கதவை உடைத்து கொண்டிருந்தனர். இதையடுத்து பொதுமக்கள் சுதாரித்து 2 பேரையும் சுற்றிவளைத்து கோட்டப்பட்டி அருகே மலைத்தாங்கி பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 50) என்பவரை மடக்கி பிடித்தனர். ஆனால் மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி மற்றும் போலீசார் கணேசனிடம் விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் தங்க நகைகள் மற்றும் வேறு ஏதேனும் திருட்டு போய் உள்ளதா என போலீசார் சோதனை நடத்தினர்.
இதே கோவிலில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கொள்ளை முயற்சி சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி