அரூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு குழந்தை திரும் ணம் நடந்ததாக மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சைல்ட் லைன் அலுவலர் சிறுமியை அழைத்து கொண்டு சென்று மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விசாரணை செய்தார். அப்போது கடந்த 12-ந் தேதி கார்த்திக் என்பவருக்கும், சிறுமிக்கும் அரூர் அருகே ஒரு கோவிலில் திருமணம் நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து சைல்டுலைன் அலுவலர், அரூர் அனைத்து மக ளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கார்த்திக், இவரது தாயார் மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.