அரூர் ஜே. சி. ஐ. , கிளை இயக்கத்தின் சார்பில், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. அரூர் கச்சேரிமேட்டில் துவங்கிய பேரணியை இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் துவக்கி வைத்தார். பஸ் ஸ்டாண்ட், 4 ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில், எஸ். ஐ. , சக்திவேல், கிளை இயக்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.