வேளாண்மை துறை அதிகாரிகள் இன்று ஜூன் 05 கூறியதாவது, தர்மபுரி மாவட்டத்தில் 2025-2026-ம் ஆண்டில் நெல், சிறுதானியங்கள், பயிறுவகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி. கரும்பு ஆகியவை 1 லட்சத்து 72 ஆயிரத்து 280 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் தர்மபுரி மாவட்டத்தில் சராசரியாக 239 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது இதனை அடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தீவிரமடைந்துள்ளது.
விவசாயிகளுக்கு விதைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேளாண் பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கும் வகையில் 2025-2026-ம் ஆண் பல்தெல் சிறுதானியங்கள் பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் விதைகளை 1, 088 டன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்து விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. விதைகள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவைக்கேற்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது.