தர்மபுரி 4 ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் நேற்று ஜூலை 05 தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 1960 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதிகபட்சமாக ஒரு கிலோ 656 ரூபாய்க்கும், சராசரியாக ஒரு கிலோ 520 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக ஒரு கிலோ 552 ரூபாய்க்கும் விற்பனையானது. மேலும் இன்று 10,89,064 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானதாக அலுவலர் தெரிவித்துள்ளனர்.