தர்மபுரி மாவட்டம் பேருந்து நிறுத்தத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நாட்டுக்கோழிகள் விற்பனைக்காக வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச்சந்தைக்கு நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளான அதியமான்கோட்டை, லளிகம், நார்த்தம்பட்டி, வத்தலமலை, தொப்பூர், வெள்ளக்கல், ஜருகு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நாட்டுக்கோழிகளை விற்பனை செய்வதற்காகவும் வாங்குவதற்காகவும் நேற்று (பிப்ரவரி 02) வந்திருந்தனர். நேற்று நாட்டுக்கோழிகளின் தரம், ரகம் மற்றும் எடைக்குத் தகுந்தாற்போல் வார்டு 400 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரையில் விற்பனையானது. மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 4.50 லட்சத்திற்கு நாட்டுக்கோழிகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.