தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் இந்தி திணிப்பு நிதி பகலில் பாராபட்சம் தொகுதி மறுசீரமைப்பில் அணைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நேற்று மார்ச் 12 அரூர் கச்சேரி மேட்டில் இரவு நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவகுரு தலைமை வகித்தார். இளைஞர் அணி துணை அமைப்பாளர் கோட்டீஸ்வரன் வரவேற்புரை வழங்கினார். இதில் தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் சிறப்புரை வழங்கினார். மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் முதன்மை பேச்சாளர் இந்திரகுமார், தேரடி இளம் பேச்சாளர் சேலம் கிருத்திகா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை வழங்கினர். இதில் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்