தர்மபுரி: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

72பார்த்தது
தர்மபுரி: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தர்மபுரி ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது. 

இதில், பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி, இலவச பட்டா, சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியத் தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 405 மனுக்கள் அளித்தனர். அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் இந்த கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 30 மாற்றுத்திறனாளிகளுக்கு 4.37 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, 3 சக்கர சைக்கிள் மற்றும் ஊன்றுகோலை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 

மேலும், காரிமங்கலம் வட்டத்துக்குட்பட்ட குண்டலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த பிரதாப் சத்யா தம்பதியின் இரண்டரை வயது மகள் தேன்விழி என்பவருக்கு இருதய அறுவைசிகிச்சை மேற்கொள்ள, புதிய மின்னணு குடும்ப அட்டையை மாவட்ட ஆட்சியர் சாந்தி வழங்கினார். கூட்டத்தில், டிஆர்ஓ கவிதா, தனித்துணை கலெக்டர் சுப்பிரமணி, திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் செண்பகவள்ளி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி