தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட மாம்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து எச். ஈச்சம்பட்டி துணை மின் நிலையம் வரை உள்ள உயர் அழுத்த மின் பாதையில் கம்பம் நடும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், இன்று மார்ச் 15-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்மொரப்பூர், செல்லம்பட்டி, பறையப்பட்டி, ஈச்சம்பட்டி, வடுகப்பட்டி, குட்டப்பட்டி, தாமரை கோழியம்பட்டி, தாமலேரிப்பட்டி, கீழானூர், காவாப்பட்டி, சங்கிலிவாடி, செக்காம்பட்டி, மாவேரிப்பட்டி, உடையனூர், முத்தானூர், ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, மாம்பாடி, பொன்னேரி, கூச்சானூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என அரூர் செயற்பொறியாளர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.