தர்மபுரி: இருசக்கர வாகனம் திருட்டு காவல்துறையினர் விசாரணை

52பார்த்தது
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட மத்தனம்பட்டி சேர்ந்தவர் தமிழ்வாணன் இவர் பிஎஸ்சி அக்ரி படித்து வருகின்றார் இவர் நார்த்தம்பட்டி பகுதியில் தற்போது வசித்து வருகின்றார் இந்த நிலையில் இவரது வீட்டிற்கு முன்பு விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் நேற்று வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணவில்லை இது குறித்து பல்வேறு இடங்களில் தேடியும் வாகனம் கிடைக்காத அடுத்து அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் ஜனவரி 09 நேற்று புகார் அளித்தார் இவர் அளித்த புகாரின் பேரில் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி