தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் அடுத்த கூச்சானூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் விவசாயி இவர், இன்று அதிகாலை தோட்டத் தோட்டத்தில் மிளகாய்களை அறுவடை செய்து, அரூர் மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றார். மொரப்பூரில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையில், தனியார் மண்டபம் அருகே சென்றபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர். திடீரென முருகனின் சட்டை பையில் இருந்த ரூ. 9ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து முருகன் மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.