கொடி காத்த குமரன் தியாகி திருப்பூர் குமரனின் 93வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. வெள்ளையனை எதிர்த்து போராடியதில் முக்கிய பங்காற்றிய திருப்பூர் குமரன் நினைவு நாளையொட்டி தருமபுரி அடுத்துள்ள அன்னசாகரம் செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு இன்று செங்குந்தர் மகாஜன சங்கம் கிளை தலைவர் விஸ்வநாதன் தலைமையில் தியாகி திருப்பூர் குமரன் நினைவு நாளையொட்டி அவரின் திருவுருவ படத்திற்கு மாவட்ட தலைவர் சிவா மற்றும் செயலாளர் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர். அதனையடுத்து மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.