தர்மபுரி: காவல்துறை சார்பில் மனிதநேய வார விழா

63பார்த்தது
தர்மபுரி மாவட்ட ஆட்சித் திராவிட பழங்குடியினர் நலத்துறை மற்றும் தர்மபுரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை இணைந்து நடத்தும் மனிதநேய வார விழா பாரதிபுரம் கார்த்திகேயன் பள்ளியில் இன்று பிற்பகல் நடைபெற்றது. வரவேற்புரையாக P. ராஜேஸ், காவல் துணைக் கண்காணிப்பாளர் சமூகநீதி (ம) மனிதஉரிமைகள் பிரிவு, A. சிவராமன் காவல் துணைக் கண்காணிப்பாளர். உட்கோட்டம், S. S. மகேஸ்வரன், வாழ்த்துரையாக S. நத்திவர்மன் அவர்கள் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி. ஹரிபிரசாந்தி , தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பராம மெடிக்கல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு காவல்துறை பல்வேறு வழிகாட்டுதல்களை தெரிவித்தனர்.

இதில் மாணவர்கள் புகையிலை கஞ்சா போதை பொருட்கள் அடிமையாகக் கூடாது. மது போதையில் வாகனம் ஓட்டக்கூடாது. குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். மாணவிகள் உயர்கல்வி படித்து முன்னேற வேண்டும் என்று காவல்துறையினர் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். R. உஷாராணி, புள்ளி இயல் ஆய்வாளர், நன்றியுரை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி