தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் அமைத்தல் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, அரூர் நகர தவெக சார்பில் KAS மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று (ஜூன் 1) ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த் முன்னிலையில் அரூர் அம்பேத்கர் நகரில் உள்ள 5, 6, 7 ஆகிய வார்டுகளில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு பரிசோதனை பெற்றுக்கொண்டனர்.