தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் சேஷம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருக்கு வயது 49. இவர் வனத்துறையில் அரூர் வனக்கோட்டத்தில் வனகாவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இவர் அரூர் கோட்டத்திற்குட்பட்ட மாம்பட்டி காப்புகாட்டில் வனபாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக உடனடியாக அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மகாலிங்கம் உயிரிழந்தார். இதுகுறித்து அரூர் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.