தர்மபுரி: வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

63பார்த்தது
தர்மபுரி: வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி கடத்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் இன்று பிப்ரவரி 06 நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது கடத்தூர் பேரூராட்சியில் நிறைவடைந்த பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து பேரூராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டில் ரூ. 6 லட்சத்தில் நடைபெற்று வரும் கழிவுநீர்கால்வாய் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு விரைவாகவும் தரமாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது பேரூராட்சித் தலைவர் குமணி, செயல் அலுவலர் விஜய சங்கர், இளநிலை பொறியாளர் பழனி, துணைத் தலைவர் வினோத் தீர்த்தகிரி உள்பட பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி