தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூக்காரெட்டிப்பட்டி கிராமத்தில் குருமன்ஸ் இன மக்களின் குலதெய்வமான வீரபத்திர சுவாமி கோவில் திருவிழா தற்போது வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது இதன் நிலையில் அவர்களுடைய பாரம்பரிய மேள தாளங்களுடன் பூ கிரகங்களை தலையின் மீது சுமந்தபடி கரகாட்டம் நடைபெற்றது. கலந்து கொண்டு பார்வையிட்டனர் மேலும் விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக முன்னிட்டு இன்று (ஜூன் 02) தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.