தர்மபுரி: மிதிவண்டி ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு பேரணி

66பார்த்தது
தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜூன் 01 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை மிதிவண்டி ஓட்டுவது குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் மற்றும் பொது மக்களுக்கும் ஏற்படுத்தும் வகையில் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த பேரணியில் சிறப்பு விருந்தினராக தர்மபுரி பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளரும் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்பி வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு மாணவர்களோடு மாணவர்களாக மிதிவண்டி ஓட்டி விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டார். இந்த பேரணி விளையாட்டு அலுவலகத்தில் இருந்து நான்கு ரோடு வழியாக மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி