தர்மபுரி மாவட்டம் மற்றும் தர்மபுரி சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் செக்போஸ்ட் அருகே இன்று பிப்ரவரி 9 ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மன் ஸ்ரீ ஐயனாரப்பன் ஸ்ரீ முனியப்பன் ஆகிய சுவாமிகளுக்கு யாக வேள்வி செய்து சிவாச்சாரியார்களால் வேத மந்திரம் ஓதி மஹா கும்பாபிஷேகம் விழா சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெற்றது. மேலும் வான வேடிக்கைகளுடன் பம்பை மற்றும் கேரள ஜண்டை மேள தாளங்களுடன் விமரிசியாக கும்பாபிஷேக விழா நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.