தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரும்பான்மையான கிராமங்கள் மலைப்பகுதியை சார்ந்து உள்ளன இந்த நிலையில் கோட்டப்பட்டி பெருமாள் கோவில் அருகே ஆற்றங்கரை ஓரத்தில் நேற்று பொதுமக்கள் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர் அப்போது அங்கிருந்தவர்கள் ஆற்றில் மீன்பிடிப்பதற்காக வலை வீசிய நிலையில் அந்த வளையல் மலைப்பாம்பு ஒன்று சிக்கியுள்ளது பெருமளவில் மீன் தான் உள்ளது என வலையை இழுத்து ஆற்றங்கரை ஓரத்தில் வைத்து பார்த்த போது 15 அடி நீளம் உள்ள பெரிய மலைப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கோட்டப்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் 15 அடி நீளம் மலை பாம்பினை பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப் பகுதிக்குள் விட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.