தர்மபுரி: அரூரில் 102 பருத்தி மூட்டைகள் ரூ. 2 லட்சத்திற்கு ஏலம்

78பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கச்சேரிமேடு பகுதியில் தர்மபுரி ஒழுங்குமுறை வேளாண் உற்பத்தியாளர் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று ஏப்ரல் 14 பருத்தி ஏலம் நடந்தது. இதில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அருண் சுற்று வட்டார பகுதிகளான மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, புதுப்பட்டி, இருளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை,
அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு, 28 விவசாயிகள் சுமார் 102 பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் ரூபாய் 6, 902 முதல் 6, 409 வரை ஏலம் போனது. இதில் மொத்தம் 2லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனதாக செயலர் அறிவழகன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி