அரூர் கரிய பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா

61பார்த்தது
தர்மபுரி மாவட்டம், அரூர் பழை யபேட்டையிலுள்ள, கரிய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 7ல் மாலை, 6: 00 மணிக்கு துவங்கி யது.
தொடர்ந்து யாகசாலை பிரவேசம் நடந்தது. 8ல் கும்ப பிரதிஷ்டை, மண்டல பூஜை, யாகசாலை பூஜை, கலச பூஜை, பிம்ப பிரதிஷ்டை நடந்தது. நேற்று முன்தினம், யாகசாலை பிரவே சமும், விழாவின் முக்கிய நிகழ்வான கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி