தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரூர் மங்கனேரி பகுதியில் இன்று அரூர் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டி கடையில் சோதனை செய்தபோது, ஒரு பையில் 735 பாக்கெட் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 6 ஆயிரம் ஆகும். மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கியது தொடர்பாக கடை உரிமையாளர் பழனிசாமி என்பவர் மீது அரூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.