அரூர்: பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவிகள் மயக்கம்

79பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூரில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 900 த்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர் இந்த நிலையில் இவர்களில் 300-க்கும் மேற்பட்டோருக்கு நேற்று பிப்ரவரி 01 மதிய உணவு வழங்கப்பட்டது மதிய உணவு சாப்பாட்டில் பல்லி இருப்பதை பார்த்த மாணவி ஆசிரியரிடம் தெரிவித்தார் அப்போது சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார் அடுத்தடுத்து மாணவிகள் மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் சிகிச்சை பிறகு 7 மாணவிகள் பின்பு விடு திரும்பினர் கனிஷ்கா என்ற மாணவி மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட விவகாரத்தில் கவனக் குறைவாக இருந்ததாக சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அறிவுறுத்தியுள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி