அரூர்: புலி நடமாடுவதாக வதந்தி பரவியதால் பரபரப்பு

60பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மொரப்பூர் அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று புலி நடமாடியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அது வதந்தி என தெரிய வந்தது. இது குறித்து இன்று வனத்துறையினர் கூறும் போது, மொரப்பூர், அரூர் வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை நடமாட்டம் இல்லை. சிலர் தவறான தகவலை பரப்பி உள்ளனர் என்று தெரிவித்தனர். இருப்பினும் புலி நடமாடும் இந்த காணொளி அரூர் மற்றும் தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி