அரூர்: திமுக நகர செயலாளருக்கு கோரிக்கை மனு

11பார்த்தது
அரூர்: திமுக நகர செயலாளருக்கு கோரிக்கை மனு
இன்று 06/07/2025, ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தினை அரூர் நகர கழக செயலாளர் முல்லை ரவி அவர்கள், அரூர் நகரத்தின் பதினைந்தாவது வார்டில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை கூறி திமுக உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அரூர் நகர இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார் & கிளை கழக செயலாளர் திருவேங்கடம் தங்கள் வார்டுக்கு சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என்று அரூர் நகர செயலாளர் முல்லை ரவி அவர்களுக்கு கோரிக்கை விடுத்தனர். நிகழ்வில் திமுக உறுப்பினர்கள் சரவணன், ஆகாஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி