அரூர்: மஞ்சவாடி பகுதியில் மழையால் போக்குவரத்து பாதிப்பு

84பார்த்தது
தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மலைப்பகுதிகளிலும் கன மழை பொழிந்து வரும் சூழலில் இன்று டிசம்பர் 26, அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மஞ்சவாடி பகுதியில் இருந்து சேலம் செல்லும் பிரதான சாலையில் கனமழையால் சாலை சேரும் சதவீதமாக உள்ளது. இந்நிலையில் அரசு பேருந்து சாலையில் சிக்கிக் கொண்டது இதனால் அங்கு போக்குவரத்து
பாதிப்பு ஏற்பட்டுள்ளது பல மணி நேரமாக ஊழியர்கள் போக்குவரத்தை சரி செய்ய ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து கனமழை பொழிந்து வருவதால் போக்குவரத்தினை சரி செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி