தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தீர்த்தமலையில் உலக பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. தினமும், 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து இந்த கோவிலை வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், தீர்த்தமலை மலைக்கோவிலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பலர், உணவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அங்குள்ள குளத்தில் வீசி செல்வதால் துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும் இது குறித்து பலமுறை சமூக ஆர்வலர்களும் ஊர் மக்களும் நிர்வாகத்திடம் குளத்தை தூய்மைப்படுத்த பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நாளுக்கு நாள் குப்பைகள் தேங்கி அந்த வழியில் செல்ல முடியாத அவலநிலை தற்போது ஏற்பட்டுள்ளது. உடனடியாக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவிலுக்கு வரும் பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.