தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி, அரூர் பாட்சாபேட்டை அரசுப்பள்ளியில், 0 முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் இன்று நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகளின் தன்மைக்கேற்ப பரிசோதனை செய்து தேசிய அடையாள அட்டை, மூன்று சக்கர வாகனங்கள், பேருந்து பயண அட்டை, ரயில் பயண அட்டை வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு உடல் நல தொந்தரவுகள் குறித்த மருத்துவ முகாமும் நடைபெற்றது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு சிகிச்சை, ஆலோசனைகளை வழங்கினர். இந்த முகாமில் அரூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.