தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சித்தேரி மலை கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெஞ்சில் புயல் காரணமாக பெய்து கனமழையால் 21 வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டது இதனால் அங்கு சில நாட்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகளை அடக்கி தற்காலிகமாக போக்குவரத்தை சீர்படுத்தினர். இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக சித்தேரி செல்லக்கூடிய பிரதான சாலையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. எனவே இன்று சித்தேரிக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வழியாக பைக்குகளில் பொது மக்கள் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.